மழை - இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சில்லென்ற ஓர் உணர்வு. மழை என்றதும் நினைவுக்கு வருவது மண்வாசம், சாரல், தெருக்களில் தேங்கி நிற்கும் நீர், மின்வெட்டு மற்றும் பல. மழை என்றால் என் நினைவுக்கு வருவது என் பள்ளிக்காலம் தான்.
சின்னஞ்சிறு வயதினிலே பள்ளிக்குச் செல்ல மிகவும் பிடிக்கும். பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருப்பது ரொம்பவும் பிடிக்கும், குறிப்பாக மழைக்காலத்தில்.
மொட்டைமாடியில் நின்று மழையில் நனைவது, மழையை ரசிப்பது, கப்பல் விடுவது போன்ற இன்பங்களையெல்லாம் விட்டு விட்டு பள்ளி செல்ல மனம் வருமா என்ன?
வானத்தில் லேசான மேகமூட்டம் இருந்தால் கூட கடவுளை வேண்டிக்கொள்வேன். “கடவுளே! இங்கு மென்மேலும் மேகங்கள் சூழட்டும், மழை கொட்டட்டும், இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்படட்டும்! “.
இன்று காலை கண் விழித்ததும் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்தேன். இன்றும் அதே போல் மேகமூட்டம். கண்ணை மூடி கடவுளிடம் வேண்டினேன். “கடவுளே இன்று பள்ளி விடுமுறையாக இருக்க வேண்டும்!” மீண்டும் கண் விழித்து பார்த்தேன். அட! நான் இப்போது இருப்பது பள்ளி அல்ல, அலுவலகம்!
நானும் விடுமுறைக்காக ஏங்கும் ஒரு குழந்தை தான்! :)
3 comments:
Excellent one!!
Naanum palli paruvatthil, mazhaikkaalangalil vagupparaiyinul sellum munbu palli vaayilil nindru vinnai nokki yosipen- indru nee azhakoodatha, palli vidumaraiyai arivikka koodatha endru!
Maaraaga pallikul sendru azhuthathu naan than!! :)
Wow... nice to see some good writing in tamil...
I usually calls my boss and tell him that i wont be there that day.. :D
Mazhayai rasippadhi vida, Mazhayil nanaivadhu than enakku migavum pidikkum.. nammudan mazhai appodhu than erandara kalandadhu pol unarvu irukkum....
பள்ளியோ அலுவலகமோ விடுமுறை தருகின்ற ஆனந்தமென்பது அலாதி தான்... செய்ய வேண்டிய வேலைகளிருக்க, சற்று சும்மா இருத்தல்... :)
Post a Comment